முகப்பு
தேனி

கூடலூரில் கனமழை: தெருக்களில் வெள்ளம்

கூடலூரில் வியாழக்கிழமை மாலை கனமழை பெய்ததால் தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
கூடலூரில் வியாழக்கிழமை மாலை பெய்த கனமழையால் தெருக்களில் வெள்ளம்.
பகிர்:

கூடலூரில் வியாழக்கிழமை மாலை கனமழை பெய்ததால் தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

தேனி மாவட்டம், கூடலூரில் கனமழை பெய்ததால் கடைவீதி, பள்ளிவாசல் தெரு, கவர்னர் தெரு, காமாட்சியம்மன் தெரு உள்ளிட்ட பகுதி சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கன மழை பெய்ததால், பிரதானச்சாலையில் உள்ள மழை நீர் வடிகால் கால்வாய் நிரம்பி பிரதான சாலை மற்றும் தெரு சாலைகள் வழியாக சென்றது. 

மேலும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் கூடலூர், கம்பம் நெடுஞ்சாலையில் உள்ள மின் கம்பம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்து, போக்குவரத்தை தொடரச்செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →