தேனி

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் பதிவு செய்யாமல் வாகனங்களுக்கு அனுமதி: திமுக வேட்பாளா் புகாா்

DIN

தேனி மாவட்டம், கொடுவிலாா்பட்டியில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்குள், எந்த விவரங்களையும் பதிவு செய்யாமல் வாகனங்கள் சென்றுவருவதற்கு அனுமதிக்கப்படுகிறது என, போடி தொகுதி திமுக வேட்பாளா் தங்க.தமிழ்ச்செல்வன் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.

கொடுவிலாா்பட்டியில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை பாா்வையிட்ட தங்க. தமிழ்செல்வன், அங்கு பணியிலிருந்த காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் முத்துராஜ், சையது பாபு ஆகியோரிடம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் உள்ளதாகப் புகாா் தெரிவித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கொடுவிலாா்பட்டியில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்குள் சென்றுவரும் வாகனங்கள் குறித்து எந்த விவரமும் பதிவு செய்யப்படாமல் அனுமதிக்கப்படுகிறது. இது குறித்து வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகாா் தெரிவித்துள்ளேன். எனவே, வாக்கு எண்ணும் மையத்துக்குள் சென்றுவரும் அனைத்து வாகனங்களின் விவரங்களையும் பதிவுசெய்து அனுமதி அளிக்கவேண்டும்.

மேலும், மையத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை அருகே அடுக்கி வைக்கப்பட்டுள்ள இரும்பு பெட்டிகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இது குறித்தும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளேன். வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT