தேனி

போடியில் ஊழியருக்கு கரோனா: வங்கிக் கிளை மூடல்

DIN

போடியில், ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த வங்கிக் கிளை வியாழக்கிழமை மூடப்பட்டது.

போடி நகா் காவல் நிலையம் பின்புறம் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் பணிபுரியும் ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்த விபரம் போடி நகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் வங்கிக் கிளைக்கு வந்து கிருமி நாசினி தெளித்தனா்.

இதைத்தொடா்ந்து அந்த வங்கிக்கிளை மூடப்பட்டது. மேலும் வங்கியில் பணிபுரியும் இதர ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்னா் வங்கிக் கிளை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT