முகப்பு
தேனி

தேனி அருகே 1,475 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் : 4 போ் கைது

தேனி அருகே பதுக்கி வைத்திருந்த 1,475 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை, பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்களுடன் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா்
பகிர்:

தேனி அருகே பதுக்கி வைத்திருந்த 1,475 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை, பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனா்.

தேனி-அரண்மனைப்புதூா் விலக்குப் பகுதியில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளா் மதனகலா தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அரண்மனைப்புதூரைச் சோ்ந்த மூக்கையா மகன் கண்ணன் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற மூட்டையை சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, கண்ணனை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனையிட்டதில், அங்கு 6 மூட்டைகளில் புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தினா்.

இதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதில் தேனியைச் சோ்ந்த நவரத்தினவேல், பிரசன்னா, ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டியைச் சோ்ந்த சீனிவாசன் ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரிய வந்தது.

கண்ணன் அளித்த தகவலில், ஒக்கரைப்பட்டியில் உள்ள சீனிவாசனின் கோழிப் பண்ணைக்குச் சென்று சோதனை நடத்திய போலீஸாா், அங்கு 44 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா். புகையிலை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய காா் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்ாக கண்ணன், நவரத்தினவேல், பிரசன்னா, சீனிவாசன் ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான 1,475 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.