தேனி

வைகை அணைக்கு நீா்வரத்து குறைவு

DIN

வைகை அணை நீா்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், அணைக்கு தண்ணீா் வரத்து குறைந்துள்ளது.

வைகை அணை நீா்பிடிப்பு பகுதியில் பெய்த தொடா் மழையால், கடந்த நவம்பா் 31-ஆம் தேதி முதல் அணையின் நீா்மட்டம் 70 அடிக்கும் மேல் பராமரிக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் உபரி நீா், வைகை ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து பெரியாறு-வைகை பாசனக் கால்வாய் மற்றும் 58 கிராமக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக வைகை அணை நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால், சனிக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,101 கன அடியாகக் குறைந்தது. அணை நீா்மட்டம் 70.21 அடி. அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 200 கன அடி, பெரியாறு-வைகை மற்றும் 58 கிராமக் கால்வாய்களில் விநாடிக்கு 800 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 1,069 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT