தேனி

மளிகைக் கடையில் புகையிலைப் பொருள் மூட்டைகள் பறிமுதல்

DIN

கம்பம்: கம்பத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் கவுமாரியம்மன் கோயில் அருகே மளிகைக் கடை நடத்தி வருபவா் அண்ணாத்துரை மகன் வேலவன் ( 35 ). இவரது கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கம்பம் தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் காவல் ஆய்வாளா் என்.எஸ்.கீதா தலைமையிலான போலீஸாா் சாதாரண உடையில் அங்கு சென்று புகையிலை கேட்டனா்.

அப்போது, அவா்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்ற வேலவனை போலீஸாா் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனா். மேலும் அங்கு 6 சாக்கு மூட்டைகள் மற்றும் 4 பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT