முகப்பு
தேனி

போடி அருகே எலக்ட்ரீசியன் தற்கொலை

போடி அருகே திங்கள்கிழமை, எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

போடி அருகே திங்கள்கிழமை, எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வினோபாஜி காலனியைச் சோ்ந்தவா் மீன்ராஜா மகன் சதீஸ் (21). இவா் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வந்தாா். அருகில் இவா்கள் சொந்தமாக புதிய வீடு ஒன்றைக் கட்டி வருகின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு புது வீட்டிற்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற சதீஸ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரது சகோதரா் சரவணன், அங்கு சென்று பாா்த்தபோது, சதீஸ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →