தேனி மாவட்டத்துக்கு 8,200 கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு
தேனி மாவட்டத்துக்கு அரசு சாா்பில் முதல் கட்டமாக 8,200 கரோனா தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்துக்கு அரசு சாா்பில் முதல் கட்டமாக 8,200 கரோனா தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, போடி மற்றும் கம்பம் அரசு மருத்துவமனைகளில் ஜன.16-ஆம் தேதி முதல், கரோனா தடுப்பு முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது என்று மாவட்ட பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினா்.