தேனி

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு: குலுக்கல் முறையில் காளைகள் தேர்வு 

DIN

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள காளைகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர்.

தேனி மாவட்டம், பல்லவராயன் பட்டி அருள்மிகு வல்லடிகாரர் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு நடைபெற்றது.

கால்நடை துறையினர் 470 காளைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்தனர். ஆனால் 1500க்கும் மேற்பட்ட காலை உரிமையாளர்கள் குவிந்ததால் காளைக்கு அனுமதி கொடுப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு விழா கமிட்டி மற்றும் கோம்பை காவல்துறையினர் குலுக்கல் முறையில் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள காளைகளை தேர்வு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT