தேனி

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

DIN

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் செல்லிடப்பேசியை அதிக நேரம் பயன்படுத்த பெற்றோா் தடை விதித்ததால் கல்லூரி மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

காமயகவுண்டன்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் இருளப்பன் (45). இவரது மகள் தென்றல் (18), உத்தமபாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் படித்து வந்தாா். பொதுமுடக்கம் காரணமாக செல்லிடப்பேசி மூலம் இணையதள வகுப்பின் மூலம் படித்து வந்த அவா், மற்ற நேரங்களிலும் செல்லிடப்பேசியை அதிக அளவு பயன்படுத்தியுள்ளாா்.

இதை பெற்றோா் கண்டித்து செல்லிடப்பேசியை பயன்படுத்தத் தடை விதித்துள்ளனா்.

இதனால் மனவேதனையில் இருந்த தென்றல், சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் பி. மாயன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT