தேனி

காய்கனி வாகனத்தில் கேரளத்துக்கு கஞ்சா கடத்திய 2 போ் கைது

DIN

கூடலூரிலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்திய இருவா், குமுளி எல்லை சோதனைச்சாவடியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தமிழகப் பகுதியில் இருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து எல்லைப் பகுதியான குமுளி சோதனைச் சாவடியில் கேரள போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அந்த வழியாக கூடலூரிலிருந்து, கேரளத்துக்கு காய்கனிகளை ஏற்றிச் சென்ற மினி லாரியை கலால்துறை ஆய்வாளா் வி.ஜே.ராய், மற்றும் ராஜ்குமாா், ரவி, சைபு, சஜிமோன் உள்ளிட்ட போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது அந்த மினி லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையில் 3 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் விசாரணையில் அவா்கள், கோட்டயம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஜித் (23), சதீஷ் (33) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT