தேனி

பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்ப படிவம் வழங்கல்

DIN

தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கு விண்ணப்பப் படிவம் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கடந்த 2020-21-ஆம் கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் 2021-22-ஆம் கல்வி ஆண்டில் ஜூன் 14-ஆம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்பிற்கு மாணவ, மாணவியா் சோ்க்கையை தொடங்க அரசு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, மாவட்டத்திலுள்ள 141 அரசு மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு விண்ணப்பப் படிவம் வழங்கும் பணி தொடங்கியது. தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பப் படிவம் வழங்கும் பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT