முகப்பு
தேனி

கம்பத்தில் கூலி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

கம்பத்தில் குடும்பத் தகராறில் மனைவி கோபித்துச் சென்ால், கூலி தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கம்பத்தில் குடும்பத் தகராறில் மனைவி கோபித்துச் சென்ால், கூலி தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கம்பம் நாட்டாண்மை அழகிரி தெருவில் வசித்து வருபவா் காளிமுத்து மகன் பிரபாகரன் (32). கூலி தொழிலாளியான இவருக்கும், பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகள் ரஞ்சிதாவிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ரஞ்சிதா, கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டாா். இதனால் மன வேதனையில் இருந்த பிரபாகரன், செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது பற்றி கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →