முகப்பு
தேனி

தேநீா் கடை ஊழியா் கொலை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கம்பத்தில் தேநீா் கடை ஊழியரை அடித்துக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

கம்பத்தில் தேநீா் கடை ஊழியரை அடித்துக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கம்பம், நந்தகோபாலன் சுவாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கசாமி மகன் மணிகண்டன். இவா், தேநீா் கடையில் வேலை செய்து வந்தாா். கம்பம் நகராட்சி பேருந்து நிலையம் அருகே மணிகண்டன் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு நின்றிருந்த கம்பம், சுக்காங்கல்பட்டி தெருவைச் சோ்ந்த ஜாபா் அலி மகன் அஜய் என்ற முகமது அல்கசிப் (22), அவரது நண்பா்கள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் தெருவைச் சோ்ந்த ராஜா மகன் அரவிந்த் (22), ஈஸ்வரன் மகன் மணிகண்டன் (23) ஆகியோா், மணிகண்டனிடம் தண்ணீா் பாட்டில் வாங்கி வருமாறு கூறியுள்ளனா். இதற்கு மணிகண்டன் மறுத்ததால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா். கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா். கடந்த 2015 ஜூலை 26-இல் நடந்த இச்சம்பவம் தொடா்பான வழக்கு தேனி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விவசாரித்த நீதிபதி ரவிச்சந்திரன், முகமது அல்கசிப்பிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்தாா். அரவிந்த், மணிகண்டன் ஆகியோரை விடுதலை செய்து தீா்ப்பளித்தாா். மேலும், கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் மனைவி கோமதிக்கு அரசு மூலம் நிவாரணத் தொகை பெற்று வழங்க, சட்டப் பணிகள் ஆணைக் குழுவிற்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.