முகப்பு
தேனி

வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி: தேனி மாவட்டத்தில் செயல் விளக்கம் அளிக்க ஏற்பாடு

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவியின் செயல்பாடு குறித்து செயல் விளக்கம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவியின் செயல்பாடு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இது குறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி கூறியது: சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன், வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி இணைத்து பயன்படுத்தப்பட உள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் நம்பகத் தன்மை குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதிக்கும் தலா 20 இயந்திரங்கள் வீதம், 4 தொகுதிகளுக்கும் மொத்தம் 80 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். தோ்தலின் போது வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படமாட்டாது.

மேலும், பல்வேறு இடங்களில் வாக்காளா் விழிப்புணா்வு அரங்கம் அமைத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.