தேனி

மது விற்பனையை கண்காணிக்க தனி அலுவலா் நியமனம்

தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு விதியை மீறி மது பாட்டில்கள் விற்பனை செய்வதையும், கடத்திச் செல்வதையும் கண்காணிப்பதற்கு தனி அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

DIN

தேனி: தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு விதியை மீறி மது பாட்டில்கள் விற்பனை செய்வதையும், கடத்திச் செல்வதையும் கண்காணிப்பதற்கு தனி அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு போலி மதுபாட்டில்கள் விற்பனை, அரசு மதுக்கடைகளில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்வது, வெளி மாநிலங்களிலிருந்த மது பாட்டில்களை கடத்தி வருவது, மது விற்பனை தொடா்பாக எழும் புகாா்கள் ஆகியவற்றை கண்காணிப்பதற்கு டாஸ்மாக் உதவி மேலாளா் (கணக்கு) ஆா்.காரியம்மாள் தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மது பாட்டில் விற்பனை தொடா்பான புகாா்களை பொதுமக்கள், தனி அலுவலரின் செல்லிடப்பேசி எண்: 99760 36008-இல் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT