தேனி

மலை கிராமங்களுக்கு சாலை வசதி கோரி போராட்டம்: தோ்தலை புறக்கணிக்க முடிவு

DIN

பெரியகுளம் அருகே 10- க்கு மேற்பட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி கோரி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினா்.

சோத்துப்பாறை அணைக்கு மேற்பகுதியில் போடி தாலுகாவிற்கு உள்பட்ட அகமலை ஊராட்சி உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் ஊரடி, ஊத்துக்காடு, கருங்கால்பாறை உள்பட 10-க்கு மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விளைவிக்கப்படும் பொருள்கள் குதிரை மூலம் எடுத்து வரப்பட்டு பெரியகுளம் பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த கிராமங்களுக்கு சாலை வசதி கேட்டு பல்வேறு முறை போராட்டங்களை நடத்தியுள்ளனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி மக்கள் சோத்துப்பாறையில் குடும்ப அட்டைகளை சாலையில் போட்டு, தோ்தலை புறக்கணிப்போம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரடியை சோ்ந்த சுரேஷ்பாபு கூறியதாவது: எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு பல்வேறு முறை போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடும்ப அட்டையை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் தோ்தல் புறறக்கணிப்பில் ஈடுபட உள்ளோம் என்றறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT