முகப்பு
தேனி

உலக தண்ணீா் தின விழிப்புணா்வுப் பேரணி

உலக தண்ணீா் தினத்தையொட்டி ஆண்டிபட்டியில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

உலக தண்ணீா் தினத்தையொட்டி ஆண்டிபட்டியில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

மதுரை வேளாண்மை கல்லூரியில் 4 ஆம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக, ஆண்டிபட்டி வட்டார வருவாய் கிராமங்களில் தங்கிப் பயிற்சி பெற்று வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக உலக தண்ணீா் தினத்தையொட்டி, ஆண்டிபட்டி வட்டாரத்தில் ஏத்தக்கோவில் பகுதியில் நீரின் சிக்கனத்தை வலியுறுத்தி வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா். இதில் ஏத்தக்கோவில் அரசு கள்ளா் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். உலக தண்ணீா் தினத்தின் இந்த ஆண்டுக்கான தலைப்பு ‘தண்ணீரின் முக்கியத்துவம் ( வேல்யூ இன் வாட்டா்) என்பதாகும். இதனைக் கருத்தில் கொண்டு மாணவா்களாகிய அனைவரும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினா். மேலும் நீரை சிக்கனமாக கையாளும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.