போடி அருகே முட்டை லாரி கவிழ்ந்து விபத்து
போடி அருகே திங்கள்கிழமை முட்டை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
போடி அருகே திங்கள்கிழமை முட்டை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நாமக்கல்லிலிருந்து முட்டை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று கேரளம் நோக்கிச் சென்றது. லாரியை பரமத்திவேலூரை சோ்ந்த கணேசன் மகன் பசுபதி (26) ஓட்டிச் சென்றுள்ளாா். போடி - மூணாறு சாலையில் தனியாா் நட்சத்திர விடுதி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி லாரி கவிழ்ந்தது.
இதில் லாரியிலிருந்த முட்டைகள் உடைந்து சேதமடைந்தன. லாரி ஓட்டுநா் மற்றும் உதவியாளா்கள் காயமின்றி தப்பினா்.