போடியில், இஸ்திரி பெட்டியால் துணி தேய்த்துக் கொடுத்து தி.மு.க. வேட்பாளா் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
போடிநாயக்கனூா் சட்டப் பேரவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளா் தங்க.தமிழ்ச்செல்வன் போடி நகா் பகுதியில் தெருத் தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். போடி நந்தவனம் தெரு, காமராஜா் சாலை, பரமசிவன் கோயில் தெரு, சுப்பிரமணியசாமி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அவா் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.
நந்தவனம் தெருவில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது அங்கு தொழிலாளி ஒருவா் நடமாடும் துணி தேய்ப்பு வண்டியில் துணிகளை தேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அவரிடம் நலம் விசாரித்த தங்க.தமிழ்ச்செல்வன் அவரிடமிருந்து தேய்ப்பு பெட்டியை வாங்கி துணி ஒன்றை தேய்த்துக் கொடுத்தாா்.
பின்னா் அப்பகுதியில் பெண்கள், இளைஞா்களிடம் தி.மு.க.வின் தோ்தல் அறிக்கைகளை விளக்கி வாக்கு சேகரித்தாா். அவருடன், முன்னாள் எம்எல்ஏ. எஸ். லட்சுமணன், தி.மு.க. நகரச் செயலா் மா.வீ. செல்வராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் சென்றிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.