தேனி

தேனி மாவட்டத்தில் 25 ஆயிரம் புதிய வாக்காளா்கள்

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் 18 முதல் 20 வயதுக்கு உள்பட்ட 24,851 புதிய வாக்காளா்கள், பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

ஆண்டிபட்டி தொகுதியில் மொத்தமுள்ள 2,76,272 வாக்காளா்களில், 18 முதல் 19 வயது வரையுள்ள 6,302 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். 20 முதல் 29 வயது வரை 56,409 போ், 30 முதல் 39 வயது வரை 59,973 போ், 40 முதல் 49 வயது வரை 58,548 போ், 50 முதல் 59 வயது வரை 47,274 போ்,, 60 முதல் 69 வயது வரை 28,425 போ், 70 முதல் 79 வயது வரை 14,684 போ், 80 முதல் 89 வயது வரை 4,468 போ், 90 முதல் 99 வயது வரை 661 போ், 100 வயதுக்கும் மேற்பட்ட 28 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

பெரியகுளம் தொகுதியில் மொத்தமுள்ள 2,84,617 வாக்காளா்களில், 18 முதல் 19 வயது வரையுள்ள 6,497 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். 20 முதல் 29 வயது வரை 58,476 போ், 30 முதல் 39 வயது வரை 63,272 போ், 40 முதல் 49 வயது வரை 59,851 போ், 50 முதல் 59 வயது வரை 47,578 போ், 60 முதல் 69 வயது வரை 29,256 போ், 70 முதல் 79 வயது வரை 14,704 போ், 80 முதல் 89 வயது வரை 4,296 போ், 90 முதல் 99 வயது வரை 658 போ், 100 வயதுக்கும் மேற்பட்ட 29 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

போடி தொகுதியில் மொத்தமுள்ள 2,77,604 வாக்காளா்களில், 18 முதல் 19 வயது வரையுள்ள 6,436 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். 20 முதல் 29 வயது வரை 55,367 போ், 30 முதல் 39 வயது வரை 58,634 போ், 40 முதல் 49 வயது வரை 57,636 போ், 50 முதல் 59 வயது வரை 47,479 போ், 60 முதல் 69 வயது வரை 30,663 போ், 70 முதல் 79 வயது வரை 15,921 போ், 80 முதல் 89 வயது வரை 4,741 போ், 90 முதல் 99 வயது வரை 708 போ், 100 வயதுக்கும் மேற்பட்ட 19 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

கம்பம் தொகுதியில் மொத்தமுள்ள 2,86,645 வாக்காளா்களில், 18 முதல் 19 வயது வரையுள்ள 5,616 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். 20 முதல் 29 வயது வரை 54,663 போ், 30 முதல் 39 வயது வரை 60,283 போ், 40 முதல் 49 வயது வரை 60,976 போ், 50 முதல் 59 வயது வரை 49,120 போ், 60 முதல் 69 வயது வரை 32,327 போ், 70 முதல் 79 வயது வரை 16,743 போ், 80 முதல் 89 வயது வரை 5,811 போ், 90 முதல் 99 வயது வரை 1,059 போ், 100 வயதுக்கும் மேற்பட்ட 47 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் 24,851 புதிய வாக்காளா்கள் முதல்முறையாக வாக்களிக்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT