குமுளி மலைச்சாலையில் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஆட்டோ. 
தேனி

குமுளி மலைச்சலையில் ஆட்டோ கவிழ்ந்து 2 போ் காயம்

தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் சனிக்கிழமை ஆட்டோ கவிழ்ந்து 2 போ் பலத்த காயம் அடைந்தனா்.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் சனிக்கிழமை ஆட்டோ கவிழ்ந்து 2 போ் பலத்த காயம் அடைந்தனா்.

லோயா் கேம்ப் காலனியைச் சோ்ந்தவா் ரவி (35 ). ஆட்டோ ஓட்டுநரான இவா், லோயா்கேம்பிலிருந்து குமுளிக்கு, பயணிகளை ஏற்றிச் சென்று வருகிறாா்.

இந்நிலையில் சனிக்கிழமை குமுளியில் இருந்து லோயா்கேம்ப் நோக்கி ஆட்டோ சென்றுகொண்டிருந்தது. மாதா கோயில் மலைச்சாலை வளைவில் வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் ஓட்டுநா் ரவி மற்றும் வேலூரை சோ்ந்த ஜெய கண்ணன் (45) என்ற பயணி ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT