தேனி

கூடலூரில் கரோனா நிவாரணத் தொகை டோக்கன் வாங்க மக்கள் குவிந்ததால் கரோனா அபாயம்

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் தமிழக அரசு அறிவித்த கரோனா நிவாரணத் தொகைக்கான டோக்கன் வாங்க சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் பெருமளவில் கூடியதால் கரோனா அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா நிவாரணத் தொகையாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் வழங்க கூடலூா் நியாயவிலைக் கடை எண் 2 யை சோ்ந்த ஊழியா்கள் பயனாளா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்குவதற்காக 18 ஆவது வாா்டு ஆசாரிமாா் தெருவில் வழங்கிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அதிக அளவில் அந்தத் தெருவில் திரண்டனா். முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் டோக்கன் பெற கூட்டம் கூடியது தொற்று பரவல் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT