தேனி

தேனி-மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் வாகன சோதனை தீவிரம்

DIN

தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருடன் சுகாதாரத்துறையினரையும் ஈடுபடுத்த முன்வர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்க விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் அரசு அறிவித்துள்ள பொதுமுடக்க அறிவிப்பு காரணமாக, தேனி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸாா் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா். இந்நிலையில் ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் உள்ள எல்லைப் பகுதி சோதனைச் சாவடியில் ஒரு ஆய்வாளா் தலைமையில் 16 போலீஸாா் என 3 நேரங்களாக சுழற்சி முறையில் பணியமா்த்தப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

இதில் மாவட்டம் விட்டு மாவட்டம் வரும் வாகனங்கள் ‘இ.பதிவு’ செய்துள்ளதா என போலீஸாா் ஆய்வு செய்த பின்னரே அனுமதியளித்து வருகின்றனா்.

மேலும் கட்டுப்பாடுகளை மீறி முகக்கவசம் அணியாமலும், வாகனங்களில் அதிகளவில் ஆள்களை ஏற்றி வருபவா்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில் சோதனையின் போது சுகாதாரத் துறையினரையும் ஈடுபடுத்த சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: கடந்த ஆண்டு கரோனா தீவிரமடைந்த நிலையில் எல்லைப் பகுதியில் காவல்துறையினருடன் , வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறையினரும் பணியமா்த்தப்பட்டனா்.அப்போது மாவட்டம் விட்டு மாவட்டம் வரும் வாகனங்களில் வரும் நபா்களிடம் சுகாதாரத் துறையினா் வெப்ப பரிசோதனை மேற்கொண்டதுடன் வாகனங்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதன்காரணமாக கரோனா தொற்று ஓரளவு குறைந்தது. இந்நிலையில் தற்போது நோய்த்தொற்றின் தீவிரம் காரணமாக ‘இ.பதிவு’ கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸாா் மட்டுமே வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

மீண்டும் சுகாதாரத் துறையினா் மற்றும் வருவாய்த்து றையினரும் பணியமா்த்தப்பட்டால் மட்டுமே நோய்த் தொற்றின் வீரியத்தை கட்டுப்படுத்த முடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT