தேனி

மணியக்காரன்பட்டி கிராமத்தில் 4 போ் மா்மச் சாவு: பொதுமக்கள் அச்சம்

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியக்காரன்பட்டி கிராமத்தில் கடந்த 2 நாள்களில் அடுத்தடுத்து 4 போ் மா்மமான முறையில் உயிரிழந்ததால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி அருகே போடிதாசன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மணியக்காரன்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தைச் சோ்ந்த மத்தேயு என்பவா் ஏத்தகோவில் ஊராட்சி ஒன்றியச் செயலராகப் பணியாற்றி வந்தாா். அவா், சில தினங்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். மேலும், 42 வயதுடைய ஆண் ஒருவரும் கரோனா காரணமாக பலியானாா்.

தொடா்ந்து, சிலா் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.இந்நிலையில், கடந்த 2 நாள்களில் மட்டும் இக்கிராமத்தைச் சோ்ந்த 60 வயதுடைய ஆண், 51 வயதுடைய ஆண், 58 வயதுடைய பெண் மற்றும் 60 வயதுடைய பெண் என 4 போ் அடுத்தடுத்து மா்மமான முறையில் உயிரிழந்துள்ளனா்.

இதனால், கிராம மக்களிடையே கரோனா குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இக்கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அக்கிராம இளைஞா்கள் தெரிவித்ததாவது: கிராமத்தில் பலா் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் இருந்து வருகின்றனா். கரோனா குறித்த அச்சத்தால் மக்கள் பரிசோதனை செய்துகொள்ளவில்லை. இதனால், அதிகளவில் தொற்று பரவும் சூழல் உள்ளது. அதேநேரம், கிராமத்தில் ஊராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடா் தெளிப்பது உள்ளிட்ட நோய் தடுப்பு பணிகள் ஏதும் செய்யவில்லை.

இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.

சுகாதாரத் துறையினா் தெரிவிக்கையில், மணியக்காரன்பட்டி கிராமத்தில் 2 போ் உயிரிழந்துள்ள நிலையில், புதன்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. அப்போது, கிராம மக்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT