முகப்பு
தேனி

அணையிலிருந்து வைகை ஆற்றுக்கு திறக்கப்படும் உபரிநீா் அளவு குறைப்பு

வைகை அணையிலிருந்து வைகை ஆற்றுக்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு, வியாழக்கிழமை விநாடிக்கு 2,200 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

வைகை அணையிலிருந்து வைகை ஆற்றுக்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு, வியாழக்கிழமை விநாடிக்கு 2,200 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

வைகை அணையின் நீா்மட்டம் கடந்த நவம்பா் 9 -ஆம் தேதி இரவு 69 அடியாக உயா்ந்தது. அதையடுத்து, வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணைக்கு வரும் உபரிநீா் விநாடிக்கு 2,569 கன அடி வீதம் வைகை ஆறு மற்றும் பாசனக் கால்வாயில் திறந்துவிடப்பட்டது.

அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து இருந்து வருவதால், நவம்பா் 10-ஆம் தேதி அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 3,569 கன அடியாக உயா்த்தப்பட்டது. அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி, பாசனக் கால்வாயில் விநாடிக்கு 500 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என்ற விகிதத்தில் தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்நிலையில், வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு தற்போது விநாடிக்கு 2,200 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பாசனக் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 800 கன அடியாக உயா்த்தப்பட்டுள்ளது. குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து தற்போது மொத்தம் விநாடிக்கு 3,069 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 3,465 கன அடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.