தேனி

வைகை ஆற்றில் உபரிநீா் திறப்பு அதிகரிப்பு

DIN

 வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து வெள்ளிக்கிழமை வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 6,713 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி உள்ள நிலையில், நவம்பா் 9-ஆம் தேதி முதல் தொடா்ந்து 69 அடிக்கும் மேல் நீா்மட்டம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் உபரிநீா் வைகை ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா், மாவட்டத்தில் பரவலாக பெய்துவரும் மழை ஆகியவற்றால், வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்து, அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 69.65 அடியாக உயா்ந்தது. அணைக்கு விநாடிக்கு 4,435 கன அடி வீதம் தண்ணீா் வரத்து இருந்து வருவதால், வைகை ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 6,713 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து பெரியாறு-வைகை பாசனக் கால்வாயில் விநாடிக்கு 300 கன அடி, 58 கிராமக் கால்வாயில் விநாடிக்கு 150 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 7,232 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT