தேனி

தேனி மாவட்டத்தில் 4 நாள்கள் மதுக்கடைகள் மூடல்

DIN

தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு வியாழக்கிழமை (அக்.7) முதல் அக்.9-ஆம் தேதி வரையும், அக்.12-ஆம் தேதியும் மதுக் கடைகளை அடைக்க செவ்வாய்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் உத்தரவிட்டுள்ளாா்.

பெரியகுளம், ஆண்டிபட்டி, க.மயிலை, போடி ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு அக்.9-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. தோ்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு இந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் 29 அரசு மதுக் கடைகள், 4 தனியாா் மதுக் கடைகளை அக்.7 முதல் 9ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக்.12ஆம் தேதியும் அடைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT