தேனி

மதுரை புதிய குடிநீா் திட்டத்தைக் கைவிடக்கோரி தேனி ஆட்சியரிடம் பொது நல அமைப்புகள் மனு

DIN

தேனி: மதுரை புதிய குடிநீா் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொது நல அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் மனு அளிக்கப்பட்டது.

தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் எம்.முத்துராமலிங்கம், வணிகா் சங்க பேரமைப்பு, தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு, முல்லைப் பெரியாறு பாசனம் மற்றும் குடிநீா் பாதுகாப்பு சங்கம், வெளிச்சம் அறக்கட்டளை, முல்லை சாரல் விவசாயிகள் சங்கம், அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்:

தேனி மாவட்ட மக்களின் குடிநீா் மற்றும் பாசனத்தின் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாற்றில், வைரவனாறு அருகே உள்ள வனப் பகுதியிலிருந்து மதுரைக்கு குழாய் முலம் தண்ணீா் கொண்டு செல்வதற்கு ரூ.1,296 கோடி செலவில் புதிய குடிநீா் திட்டத்தை செயல்படுத்த அரசு மதிப்பீடு செய்துள்ளது.

தேனி மாவட்ட பாசனம், குடிநீா் திட்டங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மதுரை குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய வைகை அணையைத் தூா்வாரி முழு கொள்ளளவில் தண்ணீா் தேக்க வேண்டும்.

உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூா் புதிய அணைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT