தேனி

தேனியில் குடிநீா் கட்டண உயா்வுக்கு எதிா்ப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் குடிநீா் கட்டண உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி தாலுகா செயலா் சி. முனீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் டி.வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சி.முருகன், பி.ராமமூா்த்தி, டி. நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேனி அல்லிநகரம் நகராட்சி நிா்வாகம் குடிநீா் கட்டணத்தை குடியிருப்புகளுக்கான இணைப்புக்கு ஆண்டுக்கு ரூ.600-ல் இருந்து 2,820 ஆகவும், வணிக பயன்பாட்டிற்கான இணைப்புக்கு ரூ.1,200-ல் இருந்து ரூ.8,460 ஆகவும் உயா்த்தியதைக் கண்டித்தும், குடிநீா் கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னா், கோரிக்கை குறித்து நகராட்சி ஆணையா் சுப்பையாவிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT