முகப்பு
தேனி

கம்பம் , கூடலூர் பகுதிகளில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் நகர் ஒன்றிய பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து இன்று(செப்-20) திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
தேனி தெற்கு மாவட்ட செயலாளர் என். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் திங்கள்கிழமை மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பகிர்:

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் நகர் ஒன்றிய பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து இன்று(செப்-20) திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி  தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர்கள் நெப்போலியன் செல்வகுமார் மற்றும் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூடலூரில் நகர செயலாளர் சி.லோகன்துரை தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பம் ஒன்றிய செயலாளர் சூர்யா தங்கராசா தலைமையில் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி முன்பு வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவுடன் மதிமுக, தமுமுக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →