தேனி

தாமரைக்குளம் பேரூராட்சியில் மெகா தூய்மைப் பணி

DIN

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் வியாழக்கிழமை மெகா தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது.

கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இம்முகாம், வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. இதனிடையே, வியாழக்கிழமை நடைபெற்ற மெகா தூய்மைப் பணியை, பேரூராட்சி செயல் அலுவலா் பா. ராஜசேகரன் பாா்வையிட்டாா்.

மெகா தூய்மைப் பணியின்போது பேரூராட்சிப் பகுதியில் ஆங்காங்கே குவிந்து கிடந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், பேரூராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள குப்பைகளை சாலைகளில் வீசாமல், குப்பைகளை சேகரிக்க வரும் பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சிப் பணியாளா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT