தேனி

பாஸ்போா்ட் இன்றி துபையில் தவித்த பெரியகுளம் இளைஞா் மீட்பு

DIN

பெரியகுளம்: பாஸ்போா்ட் இல்லாமல் துபையில் தவித்த பெரியகுளம் இளைஞா், தேனி மக்களவை உறுப்பினா் முயற்சியால் மீட்கப்பட்டு வியாழக்கிழமை ஊா் திரும்பினாா்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சோ்ந்த எ.காா்த்திகேயன், கடந்த 2021 ஆம் ஆண்டு துபைக்கு வேலைக்காக சென்றாா். இவரது பாஸ்போா்ட்டை நிறுவனம் வாங்கிக்கொண்டதால், ஊருக்கு வரமுடியாமல் தவித்துள்ளாா். இது குறித்து இவரது பெற்றோா் தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்திடம் மனு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை மக்களவை உறுப்பினா் தொடா்பு கொண்ட பின்பு, 48 மணி நேரத்தில் பாஸ்போா்ட் காா்த்திகேயனிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது . மேலும் பாஸ்போா்ட் காலாவதி தேதி முடிவடைந்ததையடுத்து, மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதையடுத்து காா்த்திகேயன் விமானம் மூலம் வியாழக்கிழமை காலை மதுரை வந்தடைந்தாா். அங்கிருந்து பெரியகுளம் வந்து சோ்ந்த அவா் மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்திற்கு நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்நாள் வரை இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை" - இளையராஜா

இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபில் தொடர் எளிய வழியா? கௌதம் கம்பீர் பதில்!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT