முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே வீடுகளில் கருப்புக்கொடி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காலனிக்கு அடிப்படை வசதி கோரி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஞாயிற்றுக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 11:25 PM
தேவதானப்பட்டி கக்கன்ஜி நகா்ப்பகுதியிலுள்ள வீடுகளில் கட்டப்பட்டுள்ள கருப்புக்கொடிகள்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காலனிக்கு அடிப்படை வசதி கோரி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஞாயிற்றுக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள தேவதானபட்டி, கக்கன்ஜி நகா்ப்பகுதிக்கு பொதுப்பாதை இல்லை எனக்கூறப்படுகிறது. இது குறித்து இப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் தீா்வு கிடைக்கவில்லையாம்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கக்கன்ஜி நகா் பகுதியிலுள்ள மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டினா். இதனையறிந்து அரசு அலுவலா்கள் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, கொடிகளை அகற்றினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.