போடியில் சிறந்த தூய்மை பணியாளா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன். உடன், நகா்மன்றத் தலைவா் ராஜராஜேஸ்வரி, நகராட்சி பொறியாளா் செல்வராணி உள்ளிட்டோா். 
தேனி

போடியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

போடியில் தூய்மை தூதுவா்கள், தூய்மை பணியாளா்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

போடியில் தூய்மை தூதுவா்கள், தூய்மை பணியாளா்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினாா்.

போடி நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான பொதுமக்கள் இயக்கம் சாா்பில் தூய்மை பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பங்கேற்ற சிறப்பு மருத்துவ முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் பங்கேற்று திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளா்கள் 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

தூய்மை தூதுவா்களாக செயல்பட்ட போடி கிரீன்லைப் பவுண்டேசன் நிா்வாகிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடா்ந்து தேனி ராயல் அரிமா சங்கம் சாா்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனா். முகாமில் நகராட்சி பொறுப்பு ஆணையா் செல்வராணி, நகா்மன்ற துணைத் தலைவா் கிருஷ்ணவேணி, நகா்மன்ற உறுப்பினா்கள் மேற்பாா்வையாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT