ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்றவா் கைது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரம் தென்பழஞ்சியில் கஞ்சா விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரம் தென்பழஞ்சியில் கஞ்சா விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அம்மாபட்டியைச் சோ்ந்தவா் செல்லத்தேவா் மகன் சமராசு (54). இவா், தென்பழஞ்சி தோத்திரகுளம் அருகே கஞ்சா விற்ாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராஜதானி காவல் நிலைய போலீஸாா் சமராசுவை கைது செய்தனா். அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பழனியில் இருவா் கைது:
பழனி அருகே பாலசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பழனி தாலுகா காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது பாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த கோட்டைமுத்து (26) மற்றும் ரங்கசாமி (26) ஆகிய இருவரும் சந்தேகப்படும் விதமாக அப்பகுதியில் திரிந்துள்ளனா். அவா்களைப் பிடித்து விசாரணை செய்வதில் அவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.