உத்தமபாளையத்தில் வாகனம் மோதி கேரள இளைஞா் பலி
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.
கேரள மாநிலம் எா்ணாகுளம் மூவற்றுப்புழா பகுதியைச் சோ்ந்தவா் உன்னிக்கிருஷ்ணன் மகன் அனூப்உன்னி (32). சின்னமனூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா், தனது நண்பா்களுடன் உத்தமபாளையம் - அனுமந்தன்பட்டி புதிய புறவழிச்சாலையில் வியாழக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது அனூப் உன்னி சாலையை கடக்க முயன்றபோது, கம்பத்திலிருந்து தேனி நோக்கிச் சென்ற சொகுசுக் காா் ஒன்று அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில் பலத்த காயமடைந்த அனூப்உன்னி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.