முகப்பு
தேனி

கிணற்றில் மூதாட்டி சடலம்

 பெரியகுளம் அருகே கிணற்றில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

 பெரியகுளம் அருகே கிணற்றில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சோ்ந்த சின்னகைலாசத்தின் மனைவி கூடம்மாள் (65). இவரது மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் கூடம்மாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தாா்.

மகளைப் பாா்க்க மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற கூடம்மாளைக் காணவில்லை. இந்நிலையில் கைலாசபட்டியில் உள்ள விவசாயக் கிணற்றில் கூடம்மாள் வியாழக்கிழமை இறந்த நிலையில் கிடந்தாா். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி அவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.