முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழு நாளை ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்துகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்துகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணையில் பருவமழை காலங்களில் அணையின் உறுதித்தன்மை, நீர் வரத்து, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் ஆய்வு நடத்துவர், அவர்களுக்கு துணையாக மத்திய கண்காணிப்பு துணைக் குழுவும் ஆய்வு நடத்தும். அதன்பேரில் கடந்த பிப்ரவரி மாதத்தில் துணைக்குழுவினர் அணையில் ஆய்வு நடத்தினர், தற்போது செவ்வாய்க்கிழமை அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர்.
மத்திய நீர் வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில், தமிழக தரப்பு பிரதிநிதிகளாக அணையின் செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வின், உதவி செயற் பொறியாளர் எம்.குமார், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் ஆய்வு நடத்துகின்றனர்.
புறக்கணிப்பு செய்த தமிழக அதிகாரிகள்: கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினர், அதன் பின்னர் குமுளி 1 ஆம் மைலில் உள்ள அலுவலகத்தில் ஆய்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக தரப்பு பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தனர்.
புறக்கணிப்பு பற்றி அவர்கள் கூறியது, முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் செய்ய உச்சநீதிமன்றம், கடந்த 2006 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அணையில் பராமரிப்புப் பணிகள் செய்ய கட்டப்பனையில் உள்ள நீர்ப்பாசன பிரிவு மற்றும் பெரியாறு புலிகள் சரணாலய தேக்கடி ( கிழக்கு) , அலுவலகத்தினர் அனுமதி தர மறுத்தும், தளவாட பொருள்கள் கொண்டு செல்லவும் தடை செய்கின்றனர்.
அது பற்றி கடந்த கூட்டங்களில் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கிறோம், இதுபற்றி தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்று கூறினர். இந்த நிகழ்வு கேரள மாநிலத்திலும், தமிழக பகுதி விவசாயிகள், மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.