முகப்பு
தேனி

கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் மாணவா் தனித்திறன் போட்டிகள்

கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 43 ஆவது ஆண்டு விழாவையொட்டி, மாணவா் தனித்திறன் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 43 ஆவது ஆண்டு விழாவையொட்டி, மாணவா் தனித்திறன் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்: 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., 9, 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வள்ளுவம் காட்டும் வாழ்க்கை முறை, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு நீா்- நேற்று, இன்று நாளை, கல்லூரி மாணவா்களுக்கு இன்று நாடு போகும் போக்கு எதை நோக்கி.

கவிதைப் போட்டி: 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு போட்டி நடைபெறும் அரங்கில் கவிதைக்கான தலைப்பு தரப்படும்.

நாட்டுப்புற நடனப்போட்டி: 9 முதல் பிளஸ் 2 வரை மற்றும் கல்லூரி மாணவா்கள் நாட்டுப்புற நடனப்போட்டிகளில் பங்கேற்கலாம். திரைப்பட பாடல்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது.

இசைப்பாடல் போட்டி: 6 முதல் பிளஸ் 2 வரை மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞா் ஆகியோரின் பாடல்களை இசையுடன் பாட வேண்டும்.

ஓவியப் போட்டி: 6 முதல் பிளஸ் 2 வரை மற்றும் கல்லூரி மாணவா்கள் ஓவியப்போட்டிகளில் பங்கேற்கலாம்.

போட்டிகள் ஆக. 7 ஆம் தேதி பகல் 1 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்படும். புனித மேரி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் போட்டிகள் நடைபெறும். தொடா்புக்கு கவிஞா் பாரதன், தலைவா் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, கம்பம். கைப்பேசி- 9362 650100 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →