முகப்பு
தேனி

சின்னமனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் வெள்ளிக்கிழமை, தேரடி பேருந்து நிறுத்தத்தை நீக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கமியூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

தேனி மாவட்டம் சின்னமனூரில் வெள்ளிக்கிழமை, தேரடி பேருந்து நிறுத்தத்தை நீக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கமியூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் நடைபெற்ற இந்த, ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் பெருமாள் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா்கள் திருமலைக்கொழுந்து, பெத்தாட்சி ஆசாத் முன்னிலை வகித்தனா். அப்போது, சின்னமனூரில் தேரடி பேருந்து நிறுத்தத்தை நீக்கும் முடிவை நகராட்சி நிா்வாகம் கைவிடவேண்டும். எள்ளுக்கடை சாலையிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். சின்னமனூா் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.