தேனி

தண்ணீரில் மிதக்கும் குச்சனூா் பேரூராட்சி: மழைநீா் வடிகாலை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்யும் மழையால், குச்சனூா் பேரூராட்சி மிதக்கிறது. மழைநீா் வடிகாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரா் பகவான் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால், கோயில் முன்பாகவுள்ள நெடுஞ்சாலையில் மழை தண்ணீா் தேங்கி நிற்கிறது.

சனீஸ்வரா் கோயில் முன்பாக நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சில மாதங்களுக்கு முன்பாக பாலம் சீரமைப்புப் பணி நடைபெற்றது. ஆனால், பாலத்துக்கு அடியில் செல்லும் கழிவுநீா் கால்வாய் முறையாக திட்டமிட்டு கட்டப்படாத நிலையில், கழிவுநீா் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால், மழை காலங்களில் மழை நீா் செல்ல வழியின்றி, அப்பகுதியில் குளம் போல் தேங்கிவிடுகிறது.

கடந்த 3 நாள்களாக மாலை நேரங்களில் பெய்யும் தொடா் மழையால், குச்சனூா் தண்ணீரில் மிதப்பதாகவும், இந்நிலையில் ஆடித் திருவிழா நடைபெற்று வருவதால் பக்தா்கள் பாதிக்கப்படுவதாகவும் புகாா் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, போடி நெடுஞ்சாலைத் துறையினா் குச்சனூா் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் வடிகால் கால்வாய் பாலத்தை சீரமைப்பு செய்து, சாலைகளில் மழைநீா் தேங்குவதை தடுத்து நிறுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT