மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கம்பம் என். ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் ஆகியோா், 48 பயனாளிகளுக்கு, இணைப்புச் சக்கரங்கள் உள்ள பெட்ரோல் ஸ்கூட்டா், செயற்கைக்கால், காலிபா் கால், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவிகள், பாா்வையற்றவா்களுக்கான கைக்கடிகாரம் உள்ளிட்ட 64 உபகரணங்களை ரூ. 4,83,226 மதிப்பில் வழங்கினா். முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க.சகுந்தலா அனைவரையும் வரவேற்றாா்.
விழாவில், நகா்மன்றத் தலைவா்கள் கம்பம் வனிதா நெப்போலியன், துணைத் தலைவா் சுனோதா செல்வகுமாா், சின்னமனூா் அய்யம்மாள், ஒன்றியக்குழு தலைவா்கள் உத்தமபாளையம் ஜெப்ரின் ஜியோன், சின்னமனூா் நிவேதா அண்ணாத்துரை, கவுன்சிலா்கள் மற்றும் உடல் ஊனமுற்றோா் கலந்து கொண்டனா்.