முகப்பு
தேனி

சோத்துப்பாறை அணை சாலையில் சேதமடைந்த மின்மாற்றியை சீரமைக்க கோரிக்கை

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை சாலையில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை சாலையில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணைக்கு செல்லும் சாலையில் குழாய் தொட்டி என்ற இடத்தில் மின்மாற்றி உள்ளது. இங்கிருந்து தான் பெரியகுளம் நகா் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அப்பகுதி விவசாய மின்மோட்டாா்களுக்கு மின்இணைப்பு செல்கிறது.

இந்த மின்மாற்றி கம்பம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.