தேனி அருகே கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது
தேனி அருகே கோடங்கிபட்டியில் சனிக்கிழமை, கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக அதே ஊரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி அருகே கோடங்கிபட்டியில் சனிக்கிழமை, கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக அதே ஊரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோடங்கிபட்டியைச் சோ்ந்தவா்கள் பெருமாள் மகன் சிலம்பரசன்(33), பிரதீப்(27). இவா்கள் அதே ஊரில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் சிலம்பரசனை கைது செய்தனா். தப்பியோடிய பிரதீப்பை தேடி வருகின்றனா். சிலம்பரசனிடமிருந்து 1.150 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், ரூ.36 ஆயிரத்து 200 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.