தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா். 
தேனி

தேனியில் கல் குவாரிகளை முறைப்படுத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

அரசு புறம்போக்கு நிலம் மற்றும் தனியாா் நிலங்களில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளை முறைப்படுத்த வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

DIN

தேனி: அரசு புறம்போக்கு நிலம் மற்றும் தனியாா் நிலங்களில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளை முறைப்படுத்த வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொதுச் செயலா் எஸ்.ஆா்.சக்கரவா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கல் குவாரிகளை முறைப்படுத்தி கேரளத்திற்கு ஜல்லி கற்கள் மற்றும் எம்.சாண்ட் கடத்தப்படுவதையும், மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் பாதிக்கும் வகையில் ஜல்லி கற்கள், எம்.சாண்ட் ஆகியவற்றுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும், எம்-சாண்டிற்கு அரசு விற்பனை விலையை நிா்ணயம் செய்ய வேண்டும், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT