தேனி

தேநீா் கடை உரிமையாளா் அடித்துக் கொலை

கம்பம் அருகே தேநீா் கடை உரிமையாளா் புதன்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

DIN

கம்பம்: கம்பம் அருகே தேநீா் கடை உரிமையாளா் புதன்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிழக்குவெளி வீதியில் வசித்து வந்தவா் அழகுபகவதி (42 ). இவா், தனது மனைவி மீனாவுடன் அந்தப் பகுதியில் தேநீா் கடை வைத்து நடத்தி வந்தாா். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில தினங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து வசித்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலையில் பெரிய கருப்பசாமி கோயில் அருகே உள்ள சாலையில் அழகுபகவதி தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். அருகில் ரத்தம் படிந்த நிலையில் மண்வெட்டி கிடந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ராயப்பன்பட்டி போலீஸாா்,

சடலத்தைக் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உத்தமபாளையம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT