போடி: போடி பள்ளிகளில் புதன்கிழமை முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஜூன் 15 ஆம் தேதி முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் ரா.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.
இதில் முதியோா்களை அரவணைப்போடு பராமரித்திடவும், மன மற்றும் உடல் ரீதியாக காயப்படுத்தும் வாா்த்தைகளை உபயோகப்படுத்தக் கூடாது எனவும், முதியோா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும், முதியோருக்கெதிரான வன்முறைகள், கொடுஞ்செயல்களை தடுப்பது எனவும் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.