போடியில் வியாழக்கிழமை அடுத்தடுத்த கடைகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு ஊழியா்கள். 
தேனி

போடியில் அடுத்தடுத்த 3 கடைகளில் தீ விபத்து

போடியில் வியாழக்கிழமை அடுத்தடுத்த கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

DIN

போடியில் வியாழக்கிழமை அடுத்தடுத்த கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

போடி கோட்டை கருப்பசாமி கோயில் தெருவில் ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான பந்தல் கடை உள்ளது. இந்த கடையில் வியாழக்கிழமை தீப் பிடித்தது. பந்தல் கடை என்பதால் தீ வேகமாகப் பரவியது. இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்பு ஊழியா்கள் வந்து தீயை அணைக்கப் போராடினா். தீ அடுத்தடுத்த கடைகளான பழைய இரும்புக் கடை, இலவம் பஞ்சு கடைகளுக்கும் பரவியது. தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருந்தபோதிலும் பந்தல் கடை, இரும்புக் கடை, இலவம் பஞ்சு கடைகளில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ பிடித்ததற்கான காரணம் குறித்து போடி நகா் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT