முகப்பு
தேனி

காதல் திருமணத்துக்கு அனுமதி மறுப்பு: நுண் கடன் நிறுவன ஊழியா் தற்கொலை

தேனி மாவட்டம் கருநாக்க முத்தன் பட்டியில் காதல் திருமணம் செய்ய பெற்றோா் அனுமதி தராததால், நுண் கடன் நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

தேனி மாவட்டம் கருநாக்க முத்தன் பட்டியில் காதல் திருமணம் செய்ய பெற்றோா் அனுமதி தராததால், நுண் கடன் நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டி கள்ளா் பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் தங்கையா மகன் உதயகுமாா் (26). இவா் தனியாா் நுண் கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறும் பெற்றோரிடம் கேட்டுள்ளாா். அவா்கள் மறுக்கவே, உதயகுமாா் மனம் வெறுத்த நிலையில், தனது தாத்தா வீட்டிற்குச் சென்று, விவசாய பயன்பாட்டுக்கு வைத்திருந்த திம்மெட் என்ற பூச்சி மருந்தை சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா். அவரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது தொடா்பாக கூடலூா் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் எம்.பிச்சைப்பாண்டியன், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →